Doctors Protest (Photo Credit: @ANI X)

ஆகஸ்ட் 17, சென்னை (Chennai News): மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை மருத்துவம் பயின்றவாறு, பணியாற்றி வந்த 28 வயதுடைய பயிற்சி பெண் மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 09ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். முதலில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், பெண் மருத்துவரின் உடலில் அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் பகுதிகளில் கடுமையான காயங்கள் தென்பட்டன.

பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்:

இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, இந்த விஷயம் குறித்த தகவல் இந்தியா முழுவதும் பரவி நீதிக்கான குரல் ஒலிக்கத்தொடங்கவே, விசாரணை தீவிரமடைந்தது. மேலும், சிபிஐ விசாரணைக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், பிரேத பரிசோதனையில் பெண்ணின் முட்டி எலும்பு எதிர்திசையில் உடைக்கப்பட்டதும், 150 மில்லி கிராம் அளவிலான உயிரணுக்களும் அவரின் உடலில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. FIR In 6 Hours If Doctors Attacked: மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணிநேரத்தில் வழக்குப்பதிவு; மத்திய சுகாதரத்துறை அதிரடி அறிவிப்பு..! 

சிபிஐ விசாரணை:

இதனால் தேசிய அளவில் போராட்டங்கள் அதிகரித்த காரணத்தால், மருத்துவருக்கு நடந்த அநீதி குறித்த செய்தி அம்பலமானது. அதேவேளையில், குற்றவாளியாக சஞ்சய் ராய் என்பவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை தகவலின்படி பலரால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்துள்ள காரணத்தால், பெற்றோரின் கோரிக்கை மனுவை ஏற்று கொல்கத்தா உயர்நீதிமன்றமும், மாநில அரசும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது.

நாடுதழுவிய போராட்டம்:

இதனிடையே பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவ மாணவிக்கு நீதிகேட்டு, அகில இந்திய அளவில் மருத்துவ சங்கத்தினர் இன்று காலை முதல் நாளை காலை வரை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். புறநோயாளிகள் பிரிவில் தமிழ்நாடு அளவில் காலை 1 மணிநேரம் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.