ஏப்ரல் 19, எர்ணாகுளம் (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம், மட்டாஞ்சேரி பகுதியில் வசித்து வரும் தம்பதி சக்கீர்-சுமினா. இத்தம்பதிக்கு நிகிதா (வயது 13) என்ற மகள் உள்ளார். இவர் கொச்சி துறைமுகம் (Kochi Harbor) பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். Israel-Iran War: இஸ்ரேல் பதிலடி தாக்குதல்; ஈரான் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல்..!

இந்நிலையில், சிறுமி நேற்று முன்தினம் இரவு, தனது பெற்றோருடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நிகிதாவும் அவரது உறவினர் மகளான பாத்திமா (வயது 4) என்ற சிறுமியும் 3-வது மாடியில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென எதிர்பாராதவிதமாக இருவரும் நிலை தடுமாறி 3-வது மாடி தளத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டனர். இதில், இரண்டு பேருக்கும் தலையில் படுகாயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாக இவர்கள் இருவரையும் மீட்டு, எர்ணாகுளம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நிகிதா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும், பாத்திமாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடிக் கொண்டிருக்கையில் தவறி விழுந்து சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.