ஏப்ரல் 19, டெல் அவிவ் (World News): சிரியா நாட்டில் உள்ள ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை (Missiles Attack) கொண்டு பதிலடி தாக்குதல் நடத்தியது. இருப்பினும், அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் தாக்குதல்களை முறியடித்தது. இதன் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. Pondicherry CM Rangasamy Casting Vote: இருசக்கர வாகனத்தில் மாஸாக வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி..!

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், 'இஸ்ரேல் தன்னை பாதுகாத்து கொள்ள தனது சொந்த முடிவுகளை எடுக்கக்கூடும்' என்று அவர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, ஈரான் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஈரானில் உள்ள இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் வெடிகுண்டு சத்தம் கேட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈரானின் மேற்கு பகுதியில் வான்வெளி மூடப்பட்டு, பல விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இச்சூழலில், இந்த கடுமையான பதிலடி தாக்குதல்கள் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.