Minor Girl Rape: துப்பாக்கியை காட்டி மிரட்டி சிறுமி பலாத்காரம்; மாடியில் இருந்து தள்ளிவிட்டு, தப்பியோடிய மர்ம நபர்..!
டெல்லியில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 26, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில், துவாரகா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியை (Gun) காட்டி மிரட்டி சிறுமியை அருகில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு கூட்டிச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் (Rape) செய்துவிட்டு, கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். Teenager Dies By Suicide: தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்; வாலிபர் எடுத்த விபரீத முடிவால் குடும்பத்தினர் சோகம்..!
இதில், சிறுமி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கொலை செய்ய முயன்ற மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாகியுள்ள அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 26, 2024 11:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

