Teenager Dies By Suicide: தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்; வாலிபர் எடுத்த விபரீத முடிவால் குடும்பத்தினர் சோகம்..!

கன்னியாகுமரியில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Teenager Dies By Suicide: தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்; வாலிபர் எடுத்த விபரீத முடிவால் குடும்பத்தினர் சோகம்..!
Hanging Suicide (Photo Credit: Pixabay)

ஜூலை 26, கன்னியாகுமரி (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்துள்ள குளச்சல் அருகே உடையார்விளையை சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் தினேஷ் பாபு (வயது 31). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலாளர்களை வைத்து ஆரி ஒர்க் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சாந்தி (வயது 29) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். Wife Killed The Husband: கணவனை கொன்று நாடகமாடிய பெண்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ரூ. 10 லட்சம் வரை கடன் (Debt Problem) ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இவரது மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது 31-வது பிறந்தநாளாகும். இதனை கொண்டாட அவரது மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, அன்று மாலை இவரது வீட்டிற்கு வந்த இவர், ஏற்கனவே கடன் தொல்லையால் மனமுடைந்து காணப்பட்ட நிலையில், வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 26, 2024 11:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).