Minor Girl Raped: சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் – 2 ஊழியர்களின் காம வெறிச்செயல்..!

கடலோர காவல்படை குடியிருப்பில் சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

Minor Girl Raped: சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் – 2 ஊழியர்களின் காம வெறிச்செயல்..!
Sexual Abuse / Rape Representational Image (Photo Credit: Pixabay)

மார்ச் 16, மும்பை (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள எல்லோகேட் பகுதியில் கடலோர காவல்படை அலுவலகம் இருக்கிறது. இதில் வேலை செய்யும் பணியாளர் ஒருவர், அந்தக் குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். அருகில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். அதே குடியிருப்பைச் சேர்ந்த சக ஊழியர்களான 23 மற்றும் 30 வயதுள்ள இரண்டு நபர்கள் சிறுமி வீட்டில் உள்ளவர்களுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். Delhi HC Bail to Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரம்; முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கொடுத்த நீதிமன்றம்.!

இதனையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி அன்று சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை கண்டு, 30 வயது ஊழியர் சிறுமிடம் தனது மனைவி உன்னை வரச்சொன்னார் என கூறியுள்ளார். சிறுமியும் உடனே அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த 23 வயது ஊழியர் சிறுமியின் வாயை பொத்தி வீட்டில் உள்ள அறைக்குள் கொண்டு சென்றுள்ளார். இவர்கள் இருவரும் சிறுமியை வற்புறுத்தி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் சிறுமியை மிரட்டி, இங்கு நடந்ததை வெளியே சொன்னால் உனது பெற்றோர்களை கொலை செய்துவிடுவோம் என கூறியுள்ளனர்.

கடந்த 2 மாதங்களாக சிறுமியை மிரட்டி இவர்கள் இருவரும் வற்புறுத்தி பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர். கடும் மனஉளைச்சலில் அவதிப்பட்டு வந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடன் நடந்ததை கூறியுள்ளார். இதனை கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து கடலோர காவல்படை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட இருவரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Mar 16, 2024 11:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).