Arvind Kejriwal ED (Photo Credit: @BarBench X)

மார்ச் 16, புதுடெல்லி (New Delhi): கடந்த 2021 - 2022ம் நிதியாண்டில், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன் வாயிலாக அரசின் வருவாய் பெரும் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், தனியாருக்கு டெண்டர் விடும் விவகாரத்தில் அரசு நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக பாஜக குற்றச்சாட்டை முன்வைத்தது. Minor Girl Killed by Tuition Master: 15 வயது சிறுமி காதல் பெயரால் சீரழிப்பு.. 43 வயது டியூசன் மாஸ்டரால் கர்ப்பிணி சிறுமி கொடூர கொலை.!

ஜாமின் கிடைக்கவில்லை: இதனையடுத்து, மதுபான கொள்கை ஊழல் விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், டெல்லி மாநில துணை முதல்வர் சிசோடியா, பி.ஆர்.எஸ் தலைவர் கவிதா உட்பட பல முக்கியப்புள்ளிகளை கைது செய்தது. இதில் முதலில் கைதான சிசோடியாவுக்கு தற்போது வரை ஜாமின் கிடைக்கவில்லை. தொடர்ந்து வழக்கு விசாரணை தீவிரமடைந்து, டெல்லி மாநில முதல்வருக்கு எதிரான விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது. Man Masturbation & Sleeping in Theatre: தியேட்டரில் சுயஇன்பம்; படம் முடிந்ததும் பார்வையாளர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி..! 

முதல்வருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு: இந்நிலையில், மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கில், அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்வதில் இருந்து முன்ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான மனுவை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம்,அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி இருக்கிறது.