Death File Pic (Photo Credit: Pixabay)

மே 18, காசியாபாத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் தம்பதி வசித்து வந்தனர். அங்கு லோனி என்ற இடத்தில் கணவர் பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி டெல்லி புறநகர் பகுதியில் உள்ள நொய்டாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. Skin Care For Men: பளபளக்கும் முகப் பொலிவு; ஆண்களுக்கான சரும பாதுகாப்பு குறிப்புகள் இதோ..!

இந்நிலையில், நேற்று முன்தினம் கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில், கணவர் தனது மனைவியின் கழுத்தை தாவணியால் நெரித்து கொடூரமாக கொலை (Murder) செய்துள்ளார். பின்னர், உயிரிழந்த மனைவியுடன் பல்வேறு கோணங்களில் செல்பி எடுத்து, அதனை தனது தம்பி மற்றும் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், இந்த நபரை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அவரது தம்பி உடனடியாக வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு, கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது, அங்கு படுக்கை அறையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டது கிடந்தார். அதே அறையில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டிருப்பதை பார்த்த இவர் அதிர்ச்சியடைந்து, காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.