மே 18, சென்னை (Beauty Tips): ஆரோக்கியமான சருமம் மற்றும் முகப் பொலிவு என்பது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் உள்ளது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும், முகப் பொலிவோடும், ஆரோக்கியமாகவும் இருக்கும் சருமத்தைப் பெற, ஆண்கள் தினமும் காலையில் சில பழக்கங்கள் கடைபிடிப்பது மிகவும் அவசியமானதாகும்.
ஆண்கள் உணவுமுறையில் சரியாக கவனம் செலுத்த வேண்டும். இது, அதிக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். முக அழகான மற்றும் சீரான சருமத்தை பராமரிக்க (Skin Care Tips) சரியான உணவுகளை உண்பதையும், எழுந்தவுடன் அதற்கு ஏற்ற பானங்களை பருகுவதையும் பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில், உடலில் இருந்து நச்சுகளை அகற்ற, எவ்வகையான பானங்களை பருக வேண்டும் என்பதனை இதில் பார்ப்போம். Motorola Edge 50 Fusion Launch: மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் இந்தியாவில் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
தண்ணீர்: ஆரோக்கியமான சருமத்தை பெற தண்ணீர் போதுமான அளவு பருக வேண்டியது அவசியமாகிறது. காலை எழுந்தவுடன் குறைந்தது இரண்டு டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றது. மேலும், சருமத்தை ஹைட்ரேட் செய்து, உற்சாகமாக உணரவும், சருமத்தை பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றது.
கிரீன் டீ: இதனை காலை நேரத்தில் குடிப்பது கூடுதல் நன்மைகளை அளிக்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சிறந்த நச்சு நீக்கும் காலை பானமாகும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, முகப்பருக்கள் மற்றும் தோலில் ஏற்படும் வெடிப்புகளை எதிர்த்துப் போராடி, நச்சுகளை வெளியேற்றுகிறது. மேலும், வயதான தோற்றத்தை குறைத்து, இளமையுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
எலுமிச்சைச்சாறுடன் தேன்: இது சரும செல்களை புதுப்பித்து, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. மேலும், இயற்கையாகவே துளைகளைத் திறந்து, சருமத்தை சுத்தப்படுத்த பெரிதும் உதவுகின்றது.
இளநீர்: இது இயற்கையாகக் கிடைக்கும் ஆரோக்கியமான பானம் ஆகும். இது சருமத்திற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை தருகிறது. செய்யும். முகச் சுருக்கங்களை குறைத்து, நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றது. உடல் வறட்சியைத் தடுக்கிறது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், அவை சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கின்றது.