அக்டோபர் 10, திருமலை (Telangana News): தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி (Rangareddy) மாவட்டத்தின் மணிகொண்டா நகராட்சியில் பணிபுரிபவர் ஜோதி. இவரது கணவர் ஸ்ரீபத். இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், மனைவி ஜோதி லஞ்சம் (Bribe) வாங்குவதாக, அவரது கணவர் நேற்று (அக்டோபர் 09) சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. PM Modi Condoles: இந்திய வர்த்தகத்தின் நாயகன் ரத்தன் டாடா மறைவு; பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்.!
அதில், அவர் தனது மனைவி ஜோதி ஒப்பந்ததாரர்களிடம் ரூ.20 முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சமாக பெற்று வருகிறார். பலமுறை சொல்லியும் லஞ்சம் வாங்குவதை கைவிடவில்லை. மேலும், லஞ்சம் வாங்க வேண்டாம் என கூறியதால் இருவருக்கும் இடையே பலமுறை குடும்ப தகராறு (Family Dispute) ஏற்பட்டது. அப்போது, அவர் அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் வாங்க அழுத்தம் கொடுப்பதாகவும், அதனை தாங்க முடியாமல் தான் லஞ்சம் வாங்குவதாகவும் கூறினார். கடந்த 7 ஆண்டுகளாக லஞ்சம் வாங்குவது தொடர்பாக அடிக்கடி எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு வருகின்றது. லஞ்சம் வாங்காமல் ஒரு நாள் கூட மனைவி வீட்டுக்கு வந்ததில்லை. லஞ்சம் வாங்கி வந்த பணத்தை வீட்டுக்கு கொண்டு வந்து, எனக்கு தெரியாமல் ரகசியமாக மறைத்து விடுகின்றார். மொத்தம் ரூ.80 லட்சத்தை மறைத்து வைத்துள்ளார்.
இதனிடையே, ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிய வந்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜோதி ஐதாராபாத் மாநகராட்சிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார் என்று அதில் தெரிவித்துள்ளார். வீட்டில் உள்ள பீரோ சுவரில், புடவைகளுக்கு இடையே, பேப்பர்களுக்கு இடையே, சாமி அறைக்குள், சாமி படங்களுக்குப் பின்னால் மற்றும் செருப்பு வைக்கும் ஸ்டாண்டில் கூட பணத்தை மனைவி மறைத்து வைத்திருப்பதை வீடியோ எடுத்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி லஞ்சம் வாங்கி மறைத்து வைத்திருக்கும் பணத்தை வீடியோ எடுத்து வெளியிட்ட கணவர்:
In a shocking revelation by the husband of former Deputy Executive Engineer (DEE) in #Manikonda Municipality in #Hyderabad, #husband Suvarna Sripad alleges that #wife Divya Jyothi engaged in #Corruption, she brought #Bribe money home everyday and hiding in house, her brother… pic.twitter.com/xg1AjyXp7r
— Surya Reddy (@jsuryareddy) October 9, 2024