Ratan Tata with PM Narendra Modi (Photo Credit: @NarendraModi X).

அக்டோபர் 10, மும்பை (Maharashtra News): இந்திய வர்த்தகம் & தொழில் சாம்ராஜ்யத்தில் மிகப்பெரிய வல்லரசை காட்டியண்டு, தனது தேவைக்கு போக பிற அனைத்தையும் தானம் செய்து வாழ்ந்து வந்த பார்போற்றும் நாயகன் ரத்தன் டாடா (Ratan Tata), தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார். அவரின் உடல் இன்று பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படவுள்ளது. ரத்தன் டாடாவின் மறைவு ஒட்டமொத்த தேசத்தையும் உலுக்கி இருக்கிறது.

தேச மக்களின் நலனை போற்றிய மகான்:

இந்திய நாட்டின் மீது தேசப்பற்று கொண்டு இருந்த ரத்தன் டாடா, தனது வாழ்நாட்களில் பல கஷ்டங்களை தாண்டி சாதித்தவர் ஆவார். இந்தியர்களுக்காகவும், அவர்களின் வளர்ச்சிக்காகவும் மிகப்பெரிய பங்களிப்பை வெளிப்படுத்தியவர். ஒவ்வொருவரின் வீட்டிலும் கார் இருக்க வேண்டும் என பிரத்தியேகமாக அதனை வடிவமைத்தவர். டாடாவின் சொத்து மதிப்பு ரூ.3900 கோடி எனினும், அவர் செய்த தானம் ஏராளம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் டாடாவின் நிறுவனங்கள் செயல்படுகிறது, அவர்களின் வாகனங்கள் சாலைபோக்குவரத்தில் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. காலையில் குடிக்கும் டீ முதல் விமானம் வரை எந்த தொழிலில் டாடா எடுபடவில்லை என்ற கேள்வியை எழுப்பும் வகையில் பல துறைகளில் சாதனை செய்த தொழில் நிறுவனமாகவும் இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில், டாடாவும் ஒன்று. RBI Monetary Policy: லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - ஆர்பிஐ கவர்னர் அதிரடி..! 

Ratan Tata (Photo Credit: @ANI X)

பிரதமர் நரேந்திர மோடி வருத்தம்:

ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலதரப்பிலும் இருந்து இரங்கல் குவிகின்றன. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளப்பாக்கத்தில், "ரத்தன் டாட்டா தொலைநோக்கு சிந்தனை கொண்ட வணிகத்தலைவர். இரக்கமுள்ள ஆன்மாவை கொண்டு அசாத்திய மனிதராக வாழ்ந்தவர். இந்தியாவின் பழமையான, மதிப்புமிகுந்த வணிக நிறுவனத்தை நிறுவி, அதற்கு ஒற்றை ஆளாக தலைமைப் பொறுப்பு ஏற்றவர். அவரின் பணிவு, இரக்கம் நமது சமூகத்தை சிறந்ததாக உருவாக்க அசைக்க முடியாத அர்ப்பணிப்பை கொடுத்தது. அதனால் பலரும் அவரை நேசித்தார்கள்.

அந்த கால நாட்களை நினைவுகூர்ந்த மோடி:

மிகப்பெரிய கனவு, கல்வி, சுகாதார, விலங்குகளின் நலம் என பல விஷயங்களிலும் அவர் தனித்துவமாக செயல்பட்டார். அவருடன் எனது மனம் நிறைந்துள்ளது. அவரை நான் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது அடிக்கடி சந்தித்து இருக்கிறேன். பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டு இருப்போம். அவரின் திறனை, எதிர்கால பார்வையை நான் கண்டவன். நான் டெல்லிக்கு வந்தாலும் அவருடன் ஆலோசனை நடத்தி இருக்கிறேன். அவரின் மறைவு வருத்தத்தையும், வேதனையையும் வழங்குகிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணம் அவரது குடும்பம், ஆதரவாளர்களுடன் இருக்கிறது. ஓம் சாந்தி" என தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடாவுடன் இருக்கும் நினைவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்ட எக்ஸ் பதிவு: