Husband Cut Off Wife's Ear: கணவன்-மனைவி தகராறு; மனைவியின் காதை அறுத்து கொடூரம்.. கணவர் கைது..!
உத்தர பிரதேசத்தில் மனைவியை தாக்கி, அவரது காதை அறுத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 08, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பஹ்ரைச் (Bahraich) மாவட்டத்தை சேர்ந்த தம்பதி பல்ராம்-ஸ்ரீதேவி. இதில், ஸ்ரீதேவி பட்காவ்லி கிராமத்தின் தலைவராக இருக்கிறார். இவரது கணவர் பல்ராம் மீது 14 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. Brother Killed his sister: சொந்த தங்கையை நடுரோட்டில் கொடூர கொலை செய்த அண்ணன்; காதலை கைவிடாததால் பகீர் சம்பவம்.!
இந்நிலையில், நேற்று முன்தினம் பல்ராம் தனது மனைவியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த அவர், ஸ்ரீதேவியை தாக்கி, அரிவாளால் மனைவியின் காதை (Cut Off The Ear) அறுத்துள்ளார். இதனையடுத்து, அவரை ஒரு அறையில் பூட்டி வைத்துள்ளார். இதுகுறித்து, நேற்றைய தினம் ஸ்ரீதேவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பல்ராமை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 08, 2024 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

