Minor Girl Rape Attempted: சிறுமியை கடத்திச் சென்று பலாத்கார முயற்சி.. வாலிபருக்கு அடி, உதை..!

ஆந்திர பிரதேசத்தில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை அப்பகுதி மக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

Girl Sexual Abuse (Photo Credit: Pixabay)

அக்டோபர் 14, திருப்பதி (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், திருப்பதி (Tirupati) மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி நகரில் உள்ள சந்தை மைதானத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை அப்பகுதி மக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். நேற்று முன்தினம் (அக்டோபர் 12) விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தூக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்ற இளம்பெண் கவனித்து அருகில் உள்ளவர்களுக்கு உடனே தகவல் கொடுத்தார்.  Road Accident: கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது பைக் மோதியதில் 3 பேர் பலி.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வைரல்..!

இதனிடையே அவர் சிறுமியை புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் மேல் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் (Rape) செய்ய முயன்றபோது, ​​அப்பகுதி மக்கள் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர், மின் கம்பத்தில் கட்டி வைத்து அவரை சரமாரியாக தாக்கினர். இதனைத்தொடர்ந்து, ஸ்ரீகாளஹஸ்தி ஒன் டவுன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும், இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பட்டப்பகலில் சிறுமியை வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement