மார்ச் 13, புதுடெல்லி (Delhi News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா மாவட்டம் செகாவன் நகரில் இருந்து மினி பேருந்து ஒன்று நாக்பூருக்கு சென்றுகொண்டிருந்தது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் சொந்த ஊருக்கு சென்று கொண்டறிருந்தனர். அந்த மினி பேருந்தை ஓட்டுநர் கோம்தேவ் கவாடே ஒட்டி சென்றுள்ளார். வரும் வழியில் உள்ள அமராவதி கோவிலில் சாமியை தரிசித்து மீண்டும் பயணத்தை தொடங்கினர். தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது ஆடம்பர மகிழுந்து (Car), மினி பேருந்தை பின் தொடர்ந்து வந்துள்ள நிலையில், நந்தகாவன் பேட்டை அருகே பேருந்தின் ஓட்டுநர் அந்த மகிழுந்து முன்னே செல்வதற்காக வழி விட்டுள்ளார். இரண்டு முறைக்கும் மேல் இவ்வாறு செய்தும் அவர்கள் முந்தி செல்ல முயற்சிக்கவே இல்லை. Garlic Water Benefits: பூண்டு தேநீரில் இவ்ளோ மருத்துவ குணம் உள்ளதா? அசத்தல் நன்மைகள் இதோ.!
துப்பாக்கி சூடு: தீடீரென அவர்கள் பேருந்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்கள், திட்டமிட்டு கொள்ளையடிக்க வந்த நிலையில், ஓட்டுநரின் கையில் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இருந்தபோதிலும், அவர் 30 கிலோமீட்டர் தொலைவுக்கு தியோசா பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று பேருந்தை நிறுத்தியுள்ளார். உடனடியாக வந்து பார்த்த காவல்துறையினர் அவரை மீட்டனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், துணிச்சலாக செயல்பட்ட ஓட்டுநர் கோம்தேவை பாராட்டினர்.
இதுகுறித்து கோம்தேவ் கூறுகையில், மகிழுந்தின் பதிவெண் சரியாக நினைவில்லை, ஆனால் உத்திர பிரதேச பதிவெண் உள்ளதாக கூறினார். மேலும், அதில் 4 பேர் இருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த காவல் துறையினர் இதற்குமுன்பு, நாசிக் நகரில் ஒரு மகிழுந்து ஒன்றை திருடியது இந்த கும்பல் தான் என கண்டறிந்துள்ளனர். மேலும், தனிப்படைகள் அமைத்து அவர்களை பிடிக்க முயற்சித்து வருகின்றனர்.