Kolkata Doctor Rape & Murder Case: பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு.. நீதிமன்றம் தீர்ப்பு..!

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஜனவரி 20ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.

Kolkata Doctor Rape & Murder Case: பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு.. நீதிமன்றம் தீர்ப்பு..!
Kolkata Doctor Rape and Murder Case (Photo Credit: @HumansofBimaru X | @ANI X)

ஜனவரி 18, கொல்கத்தா (West Bengal News): மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் (Kolkata) உள்ள ஆர்.ஜி.கர் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில், பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 09ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை (Rape And Murder) செய்யப்பட்டார். அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இந்த வழக்கில், காவல்துறையில் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை சிபிஐ கைது செய்தனர். Bank Robbery: பட்டப்பகலில் வங்கியில் ரூ. 12 கோடி மதிப்பிலான தங்கம், பணம் கொள்ளை.. முகமூடி கொள்ளையர்களுக்கு வலை..!

நாடுதழுவிய போராட்டம்:

இதனிடையே பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவ மாணவிக்கு நீதிகேட்டு, அகில இந்திய அளவில் மருத்துவ சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் போரட்டம் நடத்தினர். அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் பணியாற்றி வந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீதிமன்றம் தீர்ப்பு:

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் சீல்டா மாவட்ட நீதிமன்றம் இன்று (ஜனவரி 18) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. விசாரணை நடைபெற்று 57 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில், சீல்டாவின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அனிர்பன் தாஸ் தலைமையில் நீதிமன்றம் மூடிய கதவு அமர்வில் தீர்ப்பை வழங்கியது. சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 18, 2025 05:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).