Kotekar Bank Robbery (Photo Credit: @HateDetectors X)

ஜனவரி 18, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பீதர் பகுதியில் நேற்று முன்தினம் (ஜனவரி 16) வங்கியின் முன் பட்டப்பகலில் 2 மர்ம நபர்கள் வங்கி ஊழியர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவத்தில் ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்தார். கொள்ளை (Robbery) சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Sexual Assault On Woman: விடுதிக்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. ஓட்டுநர் கைது..!

வங்கி கொள்ளை:

இந்நிலையில், கர்நாடகாவில் மேலும் ஒரு வங்கி கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. மங்களூரு (Mangaluru) அருகே உள்ள தனியார் வங்கியில் நேற்று (ஜனவரி 17) காலை 11.30 மணியளவில் கொள்ளை சம்பவம் நடந்தது. அந்த நேரத்தில் 5 ஊழியர்கள் மட்டுமே வங்கியில் இருந்தனர். காரில், முகமூடி அணிந்து வந்த 5 பேர் வங்கிக்குள் கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்து ஊழியர்களை மிரட்டி சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி. காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் அடுத்தடுத்து வங்கி கொள்ளை சம்பவங்கள் நடந்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: