Son Stabbed His Mother To Death: பெற்றெடுத்த தாயை குத்திக்கொன்ற மகன்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்.!

கேரளாவில் சாப்பிட அழைத்த தனது தாயை அவரது மகன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Son Stabbed His Mother To Death: பெற்றெடுத்த தாயை குத்திக்கொன்ற மகன்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்.!
Crime Scene with Knife File Pic (Photo Credit: Pixabay)

ஜூன் 24, திருச்சூர் (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம், மாளா அருகே வெளியேத்து பகுதியை சேர்ந்தவர் ஷைலஜா (வயது 52). இவரது மகன் ஆதில் (வயது 27) மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதனிடையே ஆதில் தனது தாயாருடன் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை ஆதிலை அவரது தாய் ஷைலஜா சாப்பிட அழைத்துள்ளார். Connor Shields Contract Extension In Chennaiyin FC: சென்னை அணி வீரர் கானர் ஷீல்ட்ஸ் ஒப்பந்தம் நீட்டிப்பு; ரசிகர்கள் மகிழ்ச்சி..!

அப்போது, திடீரென ஆத்திரமடைந்த அவர் அருகில் இருந்த கத்தியை (Stabbed To Death) எடுத்து தனது தாயை பலமாக குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து தரையில் விழுந்துள்ளார். சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து ஷைலஜாவை மீட்டு, மாளாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மனநலம் பாதித்த மகன் தாயை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது தெரியவந்தது. பின்னர், ஆதிலை காவல்துறையினர் கைது செய்து, அவரை திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

(The above story first appeared on LatestLY on Jun 24, 2024 11:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).