Student Dies By Suicide: பள்ளி நிறுவனர் கண்டித்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை.. குடும்பத்தினர் சோகம்..!
மகாராஷ்டிராவில் பள்ளி நிறுவனர் கண்டித்ததை அடுத்து, மாணவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 13, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் அனிஷ் தல்வ. இவர், தன்னுடன் பயிலும் மாணவி குறித்து சமூக வலைதளத்தில் (Social Media) ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக மாணவர் அனிஷ் தல்வி உட்பட 3 மாணவர்களை அப்பள்ளியின் நிறுவனர் ஆல்வின் அந்தோணி கண்டித்துள்ளார். மேலும், அவர்களை பள்ளியில் இருந்து நீக்கிவிடுவதாகவும் எச்சரித்துள்ளார். அப்போது, அனிஷ் தல்வியை அவர் அடித்ததாக கூறப்படுகின்றது. POCSO Case Against Young Woman: 17 வயது மாணவரை கட்டாயப்படுத்தி உல்லாசம்; இளம்பெண் மீது போக்சோ வழக்கு..!
இதனால் மிகவும் மனமுடைந்து காணப்பட்ட மாணவர் அனிஷ் தல்வி, நிம்பாவலி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து மாணவரின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், சம்மந்தப்பட்ட பள்ளியின் நிறுவனர் ஆல்வின் அந்தோணியை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 13, 2024 11:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

