POCSO Case Against Young Woman: 17 வயது மாணவரை கட்டாயப்படுத்தி உல்லாசம்; இளம்பெண் மீது போக்சோ வழக்கு..!
திருநெல்வேலியில் மாணவரை வீட்டிற்கு அழைத்து, கட்டாயப்படுத்தி அவருடன் உல்லாசமாக இருந்த இளம்பெண் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 13, திருநெல்வேலி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் (Polytechnic College) மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. Speeding Bus Collied with Lorry: அதிவேகத்தில் தறிகெட்டு இயங்கிய தனியார் பேருந்து.. லாரி மீது மோதி ஒருவர் துடிதுடிக்க பலி.! பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!
இந்நிலையில், அந்த இளம்பெண் தனது வீட்டிற்கு வருமாறு மாணவரை அழைத்துள்ளார். மாணவரை கட்டாயப்படுத்தி வரவழைத்து இருவரும் உல்லாசமாக இருந்துவந்துள்ளனர். மேலும், தொடர்ந்து மாணவரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளம்பெண் வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு மாணவர் மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த இளம்பெண் மாணவர் பயிலும் கல்லூரிக்கு சென்று முதல்வரிடம் கூறி முறையிட்டுள்ளார். இதன்காரணமாக, மாணவரை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்தனர்.
இதுகுறித்து மாணவரின் தாயாருக்கு தெரியவர, அவர் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், சம்மந்தப்பட்ட இளம்பெண் மீது போக்சோ (Pocso Act) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jul 13, 2024 10:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

