Husband Dies By Suicide: 'என் சாவுக்கு மனைவி தான் காரணம்' - உள்ளங்கையில் எழுதி வைத்து வாலிபர் தற்கொலை..!

உத்தர பிரதேசத்தில் மனைவியின் சித்ரவதை தாங்காமல், கணவர் உள்ளங்கையில் தற்கொலை குறிப்பு எழுதி வைத்துவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband Dies By Suicide: 'என் சாவுக்கு மனைவி தான் காரணம்' - உள்ளங்கையில் எழுதி வைத்து வாலிபர் தற்கொலை..!
Husband Hanging Suicide In UP (Photo Credit: @TrueStoryUP X)

ஆகஸ்ட் 08, சம்பல் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் (Sambhal) மாவட்டம், தானாரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாமன்புரி கிராமத்தை சேர்ந்த தம்பதி ஹேமந்த் (வயது 28)-சந்திரகாளி. இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 06-ஆம் தேதி அன்று இரவு, ஹேமந்த் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டுள்ளார். Husband Cut Off Wife's Ear: கணவன்-மனைவி தகராறு; மனைவியின் காதை அறுத்து கொடூரம்.. கணவர் கைது..!

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்ட போது, அவரது உள்ளங்கையில் எழுதப்பட்ட தற்கொலை குறிப்பு கண்டறியப்பட்டது. அதில், 'எனக்கு 2 நாட்களாக மனைவி உணவு அளிக்கவில்லை. என்னை தொடர்ந்து சித்ரவதை செய்து வருகிறார். மேலும், அவர் வேறொருவரை காதலிக்கிறார். அதனால், என்னை அடித்து துன்புறுத்துகிறார். என் சாவுக்கு என் மனைவி சந்திரகாளி தான் காரணம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, இறந்தவரின் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஹேமந்தின் மனைவி சந்திரகாளியை காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 08, 2024 03:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).