Teenager Stabbed Young Girl: காதல் விவகாரத்தில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து; காதலன் வெறிச்செயல்..!

பெங்களூருவில் காதலி தன்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டதால், இளம்பெண்ணை வாலிபர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Teenager Stabbed Young Girl: காதல் விவகாரத்தில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து; காதலன் வெறிச்செயல்..!
Knife (Photo Credit: Pixabay)

ஜூலை 29, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டத்தில் உள்ள கொரட்டகெரேயை சேர்ந்தவர் பவ்யா (வயது 25). இவர் கடந்த 5 ஆண்டுகளாக பெங்களூரு புறநகர் மாவட்டம், தொட்டபள்ளாப்புராவில் உள்ள ஆடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அப்போது, இவருக்கும் ராமாச்சாரி என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது.

இந்நிலையில், இவர்களது காதல் விவகாரம் பவ்யாவின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இவர்களது காதலுக்கு அவரது பெற்றோர் மறுப்புத் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், அவருடன் பேசுவதையும் நிறுத்துமாறு எச்சரித்துள்ளனர். இதனால், அவர் ராமாச்சாரியுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். மேலும், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். Old Woman Murder By Couple: மூதாட்டியை கொலை செய்து நகை, பணம் கொள்ளை; இளம்தம்பதியினர் கைது.. சென்னையில் பயங்கரம்..!

இதனால் ஆத்திரமடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு தனது காதலி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருடன் இதுகுறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது பெற்றோர் கண்முன்னே பவ்யாவை கத்தியால் (Stabbing) சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே, ராமாச்சாரியும் தனது கையை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு (Suicide Attempt) முயன்றுள்ளார். அவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ராமாச்சாரி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 29, 2024 01:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).