ஜூலை 29, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் மூதாட்டி விஜயா (வயது 78). கடந்த ஜூலை 17-ஆம் தேதி முதல் இவரை காணவில்லை என அவரது மகள் லோகநாயகி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், காவல்துறையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை (CCTV Camera) ஆய்வு செய்து வந்தனர். அப்போது, மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தம்பதி பார்த்திபன்-சங்கீதா மீது காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர்.
இதில், பார்த்திபன் குறித்து விசாரிக்கையில், அவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், சம்பவ நாளன்று இவரது செல்போனும், மூதாட்டி விஜயாவின் செல்போனும் ஒரே நேரத்தில் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், அவரிடம் விசாரணை மேற்கொள்ள சென்றபோது, அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது. இந்நிலையில், விருதுநகரில் பதுங்கி இருந்த தம்பதியினரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். Jewellers Sons Kidnap: நகை வியாபாரியின் மகன்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கடத்தல் கும்பல்; காவல்துறையினர் அதிரடி.. 5 பேர் கைது..!
விசாரணையில், அவர்கள் மூதாட்டியை கொலை (Murder) செய்து சைதாப்பேட்டையில் கால்வாயில் மூட்டையில் சடலத்தை கட்டி வீசியுள்ளது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணையில், மூதாட்டியின் மகள் லோகநாயகி சங்கீதாவிற்கு 20 ஆயிரம் பண கொடுத்துள்ளார். அந்த பணத்தை திருப்பி தர வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து, அங்கு சென்ற சங்கீதா அவரது சுருக்குப் பையை எடுத்துள்ளார். அதனை பார்த்த மூதாட்டி சத்தம் போட்டுள்ளார். இதனால், அவரது தலையில் இரும்பு கம்பியை கொண்டு பலமாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரது கணவருக்கு தெரியப்படுத்தி இவர்கள் இருவரும் சேர்ந்து மூதாட்டியை சாக்கு மூட்டையில் கட்டி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று கால்வாயில் வீசியுள்ளது தெரியவந்தது. மேலும், வீட்டில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மூதாட்டி அணிந்திருந்த 3 சவுரன் நகை எடுத்துக்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.