காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி கைது.. போலீஸ் விசாரணை..!
உத்தர பிரதேசத்தில் மனைவி தனது காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 09, ஆக்ரா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவை (Agra) சேர்ந்த தம்பதி சுரேஷ் சிங் - பிரீத்தி. இவர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில், மனைவி பிரீத்திக்கு வீரு என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக காதலித்து வந்துள்ளனர். பிரீத்தி தனது காதலனை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இதனால், தனது கணவரை கொலை செய்ய முடிவு செய்தார். JustIN: பாலம் இடிந்து விழுந்து விபத்து.. 10 பேர் பலி.. குஜராத்தில் சோகம்.!
கணவர் கொலை:
இதனையடுத்து, தனது காதலனுடன் சேர்ந்து தனது கணவர் சுரேஷ் சிங்கை தூக்கிலிட்டுக் கொன்றனர். பின்னர், தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக பிரீத்தி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பிரீத்தி தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை (Murder) செய்தது தெரியவந்தது. இதனிடையே, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மனைவி பிரீத்தி கைது செய்யப்பட்டார். தலைமறைவாகியுள்ள காதலன் வீருவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

