ஜூலை 09, வதோதரா (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா மாவட்டத்தில், கம்பிரா பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலம் இன்று காலை இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி மற்றும் கார், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் வாகனத்துடன் மாகி நதியில் மூழ்கினர். இந்த சம்பவத்தில் முதல் கட்டமாக மூன்று பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாலம் இடிந்து விழுந்தது:
இந்த சம்பவத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், ஆற்றல் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7:30 மணி அளவில் பாலம் விழுந்ததாக தெரியவரும் நிலையில், நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளன. பாலம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் தெரிவித்த உள்ளூர் மக்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாதது பாலம் விபத்துக்கான காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தையே தீ வைத்து எரித்துக்கொன்ற கிராம மக்கள்.. மூடநம்பிக்கையின் உச்சம்.!
அகமதாபாத் விபத்து:
சமீபத்தில் தான் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கி 270 பேர் வரை உயிரிழந்து இருந்தனர்.
பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பான வீடியோ :
#WATCH | Vadodara, Gujarat | The on the Mahisagar river, connecting Vadodara and Anand, collapses in Padra; local administration present at the spot. pic.twitter.com/7JlI2PQJJk
— ANI (@ANI) July 9, 2025