Fact Check 5G Tower: 5G டவருக்காக டிராய் நிலம் வாங்குவோருக்கு பணம் - டிராய் பெயரை பயன்படுத்தி மோசடி. அதிகாரிகள் எச்சரிக்கை.!
5ஜி செல்போன் கோபுரம் அமைக்க டிராய் நிலத்தை வாடகைக்கு கேட்கிறது. இதற்காக மாதம் வாடகை வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணையவிரும்புபவர்கள், திரும்ப பெற இருக்கும் வடிவில் முதலில் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என வைரலாகும் அரசாணை போலியானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு சேவைகளை நிர்வகிக்கும் TRAI அமைப்பு, 5G நெட்ஒர்க் சேவைக்கான டவர்களை அமைக்க உங்களின் நிலத்தை கேட்கிறது. வீட்டில் இருந்தபடி மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அதற்கான கட்டண தொகை நிலத்தின் உரிமையாளருக்கு வழங்கப்படும். நீங்கள் திரும்ப பெறவிருக்கும் வடிவிலான ரூ.10 ஆயிரம் முன்பணத்தை செலுத்தினால் போதும் என்று சமூக வலைத்தளங்களில் TRAI ஆணை ஒன்று வைரலானது. இந்த அறிவிப்பு போலியானது, யாரும் இந்த அறிவிப்பை நம்ப வேண்டாம். TRAI உங்களிடம் முன்பணம் கேட்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Kochi Airport Seized Gold: உடலில் மறைத்து கேப்ஸுல்களில் எடுத்து வரப்பட்ட தங்கங்கள் பறிமுதல் – கொச்சி விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை.!
A company in the name of @TRAI, claims to provide a monthly salary, rent & advance payment for installing mobile towers in lieu of a refundable advance payment of ₹5,000-10,000#PIBFactCheck
▶️This letter is #Fake
▶️TRAI has not issued this letter
🔗https://t.co/l3dlp26ujQ pic.twitter.com/aLNtaUWx1B
— PIB Fact Check (@PIBFactCheck) February 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 15, 2023 07:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

