Tractor Bus Collision: டிராக்டர் - அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து; 16 பயணிகள் படுகாயம்..!
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் சிக்கி 16 பயணிகள் காயமடைந்த சோகம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 31, பாஸ்டி (UttarPradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாஸ்தி மாவட்டம், கரையா (Hariya) பகுதியில் இன்று டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
கரையா தாலுகாவுக்கு உட்பட்ட தேனுவா கிராமத்தில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 28ல் 33 பயணிகளுடன் டிராக்டர் சென்றுகொண்டு இருந்தது. இந்த டிராக்டரும் - பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். Telengana Officials Inspection: தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் காலை உணவு திட்டம்: ஆய்வு செய்யும் தெலுங்கானா மாநில அதிகாரிகள். !
சுமார் 16 பயணிகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், அவர்களை மீட்ட உள்ளூர் மக்கள் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிகிச்சை பெற்ற 16 பேரில் 6 பேர் முதலுதவி சிகிச்சை பெற்றபின் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 10 பேர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Aug 31, 2023 04:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

