ஆகஸ்ட் 31, சென்னை (Political News): கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 25 ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் இந்த காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 31,000 அரசுப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.
எளிய பின்புலம் உடைய பிள்ளைகள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிப்பதற்காக இந்த காலை உணவு திட்டத்தை தந்தை பெரியார் தொடங்கி வைத்தார். அவரின் கொள்கைகளை பின்பற்றும் விதமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பயின்ற அரசுப்பள்ளியில் காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை தொடங்கிவைத்தார் மு.க ஸ்டாலின். Jawan Trailer: ஆக்சனில் நொறுக்கும் ஷாருக்கான்; புகுந்து விளையாடும் வில்லனாக விஜய் சேதுபதி.. ஜவான் திரைப்படத்தின் அட்டகாசமான ட்ரைலர் உள்ளே.!
ஏற்கனவே மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மக்களுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார். அதில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளும் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் ஆகியவை உள்ளடங்கும்.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை தெலுங்கானா மாநிலத்தின் ஐந்து பேர் உள்ளடங்கிய அதிகாரிகளின் குழு ஆய்வு செய்கிறது. இதில், உணவு தயாரிக்கப்படும் முறை, அது பள்ளிக்கு எடுத்துச் செல்லப்படும் முறை மற்றும் மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறப்படும் விதம் ஆகியவற்றை அதிகாரிகள் நேரடியாக பார்வையிடுகின்றனர்.
அதன் முதற்கட்டமாக சென்னை ராயபுரத்தில் உள்ள ஜி சி சி பள்ளி கட்டிடத்தில் காலை உணவு தயாராகும் முறையையும் மற்றும் மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளியில் உணவு பரிமாறப்படுவதையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.