Army Soldiers Kidnapped: காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல்.. தேடும் பணி தீவிரம்.., நடந்தது என்ன..?

காஷ்மீரில் இரண்டு ராணுவ வீரர்கள் கடத்தப்பட்டதில், ஒருவர் தப்பிய நிலையில் மற்றொருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Army Soldiers Kidnapped: காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல்.. தேடும் பணி தீவிரம்.., நடந்தது என்ன..?
Army Soldiers in Kashmir (Photo Credit: @JannateKashmi07 X)

அக்டோபர் 09, ஸ்ரீநகர் (Jammu Kashmir News): காஷ்மீரில் அனந்தநாக் (Anantnag) மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் (Army Soldiers) இருவர் கடத்தப்பட்டனர். அதில் ஒருவர் தப்பிவந்த நிலையில் மற்றொருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (அக்டோபர் 08) இரவு இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. கடத்தப்பட்ட ராணுவ வீரரை தேடும் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Police Constable Suspended: குடிபோதையில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. காவலர் பணியிடை நீக்கம்..!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்றைய தினம் எண்ணப்பட்டன. இதனையொட்டி யூனியன் பிரதேசம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராணுவ வீரர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Oct 09, 2024 10:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).