5 Aged Child Rape by 2 Minors: ஆபாச படம் பார்த்து அதிரவைக்கும் கொடுமை.‌‌. 5 வயது சிறுமியை சீரழித்த 8, 10 வயது சிறார்கள்.!

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல முன்னேற்றங்களை தந்தாலும் அறியாமை, பெண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தவறியது உட்பட பல காரணத்தால் சிறார்கள் இன்றளவில் அதிக குற்றச் செயல்களில் ஈடுபடும் சோகம் நடந்து வருகிறது.

Minor Girl / Child Abuse | Representative Image (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 11, கோண்டா (Uttar Pradesh News): படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய வயதில் செல்போன்களை பார்த்து ஆபாச படங்களுக்கு அடிமையாகும் சிறார்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்படும் அவலம் அடுத்தடுத்து நடைபெற்று வருவது எதிர்கால இளைஞர்களின் மன எண்ணத்தை மிகவும் கேடான வகையில் மாற்றி இருப்பதை தெளிவுபடுத்துகிறது. படிக்க வேண்டிய வயதில் ஆபாச படம் பார்த்த சிறுவன், மற்றொரு சிறுவனை சேர்த்துக்கொண்டு ஐந்து வயது சிறுமியை ஈவு இரக்கமின்றி கற்பழித்த சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

பள்ளி வளாகத்தில் தனியாக இருந்த சிறுமி: உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்து வயதுடைய சிறுமி பயின்று வருகிறார். இதே பள்ளியில் எட்டு மற்றும் பத்து வயதுடைய சிறார்களும் பயின்று வந்துள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமி மதிய உணவு இடைவெளியின் போது தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இரண்டு சிறார்களால் அதிர்ச்சி சம்பவம்: அச்சமயம் பள்ளியில் பயின்று வந்த எட்டு மற்றும் பத்து வயது சிறார்களால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சிகர சம்பவம் பள்ளி வளாகத்திலேயே நடைபெற்ற நிலையில், வீட்டிற்கு வந்த சிறுமி இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்‌. இதனையடுத்து, தனது மகளிடம் விபரத்தை கேட்டறிந்து அதிர்ந்து போன பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போக்சோ வழக்கில் கைது: புகாரை ஏற்ற தானேப்பூர் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உண்மை அம்பலமாகவே, இரண்டு சிறார்களும் கைது செய்யப்பட்டனர். சிறுமியும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறார்கள் இருவரும் ஆபாசமான வீடியோவை பார்த்து இவ்வாறான அதிர்ச்சி செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement