நவம்பர் 09, சென்னை (Chennai News): ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 3 வயது குழந்தை ஷாம். சிறுவன் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது பலூனை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிய வருகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் பலூனை விழுங்கியதாக கூறப்படும் நிலையில், மூச்சு திணறி அவதிப்பட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய் மகனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நாளைய வானிலை: இன்றும், நாளையும் அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
பலூனை விழுங்கியதால் 3 வயது சிறுவன் மரணம்:
அங்கு பரிசோதனை செய்தபோது சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மகனை மடியில் போட்டு தாய் கதறி அழுதது காண்பாரை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறுவர்கள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், சிறார்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் சிறிய ஒரு பொருளையும் அலட்சியமாக வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை:
பலூன் போன்றவற்றை வாங்கி கொடுத்தால் அதனை பெரிதாக இருக்கும் போதே குழந்தைக்கு விளையாட்டு காட்டிவிட்டு அப்புறப்படுத்தி விட வேண்டும். பலூன் வெடித்த பிறகும் அல்லது ஊதப்படாத நிலையில் உள்ள பலூனையும் சிறார்களிடம் கொடுக்கக் கூடாது என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.