UP Shocker: மாயமான 6 வயது சிறுமி 40 நாட்கள் கடந்து சடலமாக மீட்பு; கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த அவலம்.!

வீட்டின் வாசலில் மகள் விளையாடுகிறார் என இருந்த பெற்றோருக்கு அதிர்ச்சி தரும் வகையில் சிறுமி மாயமான நிலையில், 40 நாட்கள் கழித்து அவரின் உடல் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

UP Shocker: மாயமான 6 வயது சிறுமி 40 நாட்கள் கடந்து சடலமாக மீட்பு; கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த அவலம்.!
Missing Child Found Died in UP (Photo Credit: @SachinGuptaUP X)

ஜனவரி 25, மீரட் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட், மச்ரா கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுன் சிங். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 6 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில், கடந்த 40 நாட்களுக்கு முன்பு, ஜனவரி 14ம் தேதி சிறுமி தனது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தார். குழந்தை வாசலில் விளையாடுகிறாளே என பெற்றோர் வீட்டிற்குள் இருந்துள்ளனர்.

மாயமான (Missing Girl Found Dead) சிறுமி: வீட்டின் வாசலில் இருந்த சிறுமி மாயமாகி இருக்கிறார். அவரை அக்கம் பக்கத்து வீடுகளில் தேடிய பெற்றோர், சிறுமி அங்கு இல்லை என்பதை உணர்ந்து பதறிப்போயுள்ளனர். பின் அங்குள்ள கிதௌர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். ஆனால், எவ்விதமான முன்னேற்றமும் இல்லை. Trending Video: கார் கண்ணாடியில் குளிர்பானத்தை ஊற்றிய இளைஞர்; நொடியில் நடந்த மாற்றம்.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.! 

சடலமாக மீட்பு: இந்நிலையில், நேற்று சிறுமி வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள குப்பையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரின் கை-கால் ஆகியவை கட்டப்பட்டு, உடல் சாக்கு மூட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி 14ம் தேதி மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்து மாயமான சிறுமி, நேற்று 40 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணை: இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், முதற்கட்ட தகவலின்படி, சிறுமியை உயிருடன் வைத்திருந்து பின் கொலை செய்து இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டு, அதன்பேரில் துரித விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Feb 25, 2024 09:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).