Rape | Representative image (Photo Credit: ANI)

நவம்பர் 22, பக்ரைச் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பக்ரைச் (Bahraich 21 Aged Young Girl Raped by 2 Man Gang) மாவட்டத்தில், 21 வயது பெண்மணி வசித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் 16ம் தேதி அங்குள்ள மருத்துவமனைக்கு முன்பு, உடல் மோசமான நிலையில் பிறப்புறுப்பில் இருந்து இரத்தம் வழிந்தவாறு நின்றார்.

இவரைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவப்பணியாளர்கள், உடனடியாக பெண்மணிக்கு மருத்துவ சிகிச்சை வழங்கினார். அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியான காரணத்தால், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அழைக்கப்படுவதை உறுதி செய்துவிட்டு, விசாரணையை முன்னெடுத்தனர். பெண்மணி கூறிய தகவலின்படி, 2 பேர் அவரை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. Same Sex Marriage Thailand: ஓரினசேர்க்கை திருமணத்திற்கு அனுமதி: தாய்லாந்து அரசு அறிவிப்பு: கொண்டாட்டத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள்.! 

இதனையடுத்து, பக்ரைச் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கன்வர் ஞானஞ்சய் சிங் தலைமையிலான 4 தனிப்படைகள், குற்றவாளிகளை தேடி வந்தனர். மருத்துவமனை முன்பு இருந்த சிசிடிவி முதல் 400 கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டு குற்றவாளிகளின் அடையாளம் சேகரிக்கப்பட்டது.

விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறையினர், 35 வயதான ஆட்டோ ஓட்டுநர் பப்லு என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், 21 வயது இளம்பெண்ணை நண்பருடன் சேர்ந்து பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

தலைமறைவாக இருக்கும் அவரின் நண்பருக்கு வலைவீசப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 16ம் தேதி இரவில் பெண்ணை பலாத்காரம் செய்த கயவர்களின் கொடுமையால், பெண் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார். ஒருகட்டத்தில் அவர் மயங்கிவிட, கொலைகேசில் சிக்கிவிடுவோம் என பயந்துபோனவர்கள் மருத்துவமனை முன்பு பெண்ணை விட்டுவிட்டு சென்றுள்ளனர்.