Same Sex Relationship - LGBTQ Flag (Photo Credit: X)

நவம்பர் 22, பேங்காக் (World News): தாய்லாந்து நாட்டின் தலைநகரமாக செய்யப்பட்டு வரும் பேங்காக் (Bangkok, Thailand), உலகளவில் கவனிக்கப்படும் முக்கிய நகராக உள்ளது. அங்கு கடற்கரை அழகுகள், முக்கிய சுற்றுலாத்தலங்கள் உலகளவில் வரும் மக்களால் ரசிக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் எழுந்துள்ள தன்பாலின சேர்க்கையாளர் திருமண அனுமதி தொடர்பான பிரச்சனையை, சமீபகாலமாகவே தாய்லாந்து நாடும் சந்தித்து வந்தது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களின் விருப்பத்திற்கும் அனுமதி தரவேண்டும் என அரசுக்கு பல கோரிக்கை வைத்து வந்தனர். Thiruvannamalai Deepam 2023: கார்த்திகை தீப நாள் எப்போது?.. தீபங்களை ஏற்றி நல்வழிப்பட விபரம் இதோ.! ஆன்மீக நண்பர்கள் தெரிஞ்சிக்கோங்க.! 

இந்நிலையில், தாய்லாந்து அரசு தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டத்திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கிடவே, விரைவில் சட்டம் அமலுக்கு வாரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தாய்லாந்து சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கும் அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சட்டம் பிரதமர் சரிதா தவிசின் (Srettha Thavisin) முன்பு டிசம்பர் 12 அன்று தாக்கல் செய்யப்படும்.

பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதும், மன்னரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அமல்படுத்தப்படும். இதனால் தாய்லாந்து நாடு தைவான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் ஆசியாவில் தன்பாலின சேர்க்கை திருமணத்தை அங்கீகரித்த நாடுகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இத்தகவல் தன்பாலின ஈர்ப்பாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.