Wife Bites Husband's Private Part: இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு வற்புறுத்திய கணவன்; அந்தரங்க உறுப்பை கடித்து கபளீகரம் செய்த மனைவி.!
கணவன் - மனைவி உறவில் மிக முக்கிய அன்பு பாலமாக அமைவது காமமும் தான். அதில் விருப்பமில்லாத, திருப்தியில்லாத தாம்பத்தியம் அது சார்ந்த பிரச்சனைகளை கட்டாயம் தரும்.
ஜனவரி 29, ஹமிர்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹமிர்பூர் மாவட்டம், சதன்கோட்வாலி - திக்ராலி கிராமத்தில் வசித்து வருபவர் ராமு நிஷாத் (வயது 35). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி (Wife Bite Husband Genital) மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். உடலுறவில் அதிக நாட்டம் கொண்ட ராமு, தனது மனைவியை இயற்கைக்கு மாறான வகையில் உறவு வைக்க வற்புறுத்தி உல்லாசம் அடைவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
தாம்பத்தியத்தில் வெறுப்பு: மனைவியும் கணவரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை எனினும், வேறு வழியின்றி அனைத்தையும் பொறுத்துக்கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தம்பதிகள் தங்களின் அறையில் உறங்கச் சென்றபோது, கணவர் மனைவியை வழக்கம் போல வற்புறுத்தி இருக்கிறார்.
வாயில் கவ்வி கபளீகரம் செய்த மனைவி: இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவரின் ஆணுறுப்பை வாயால் கடித்து இருக்கிறார். இதனால் வலிபொறுக்க இயலாமல் கணவர் கதறவே, அவரின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் வந்தும் பெண்மணியிடமிருந்து அவரை சில வினாடிகள் போராட்டத்திற்கு பின் மீட்டனர். Moringa Benefits: சிறுநீர், இரத்த சுத்திகரிப்புக்கு முருங்கைக்காய்; அசத்தல் நன்மைகள் இதோ.!

உண்மையை மறைந்த ராமு: அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, முதலில் மருத்துவர்கள் என்ன நடந்தது? என்று கேட்டபோது இது குறித்து ராமு உண்மையை தெரிவிக்காமல் இருந்துள்ளார். அதனைத்தொடர்ந்து, குடும்பத்தினர் நடந்த விபரங்களை தெரிவிக்கவே, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கண்ணீருடன் கணவரின் செயல்பாடை விவரித்த பெண்மணி: மேலும், இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரித்த போது, தனது கணவர் தனது விருப்பத்திற்கு மாறாக உடலுறவில் இழைத்த பல கொடுமைகளை கண்ணீருடன் விவரித்த பெண்மணி, ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காமல் இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்காததால் காவல்துறையினர் மேற்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை நடத்தவில்லை. ராமு நிஷாந்த் மேல் சிகிச்சைக்காக கான்பூர் அனுப்பி வைக்கப்பட்டார்.
அந்த விஷயத்தில் வற்புறுத்தல் கூடாது: கணவன் - மனைவி உறவில் தாம்பத்தியம் மிகமுக்கியமான விஷயம் ஆகும். தம்பதிகள் தங்களின் துணையை வற்புறுத்தி தாம்பத்தியம் மேற்கொள்வது கட்டாயம் இவ்வாறான சோகங்களில் சென்றும் முடியலாம் என்பதை நினைவில் கொண்டு செயல்படுவது நல்லது.
(The above story first appeared on LatestLY on Jan 29, 2024 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

