Murungaikkai Flower (Photo Credit: Pixabay)

ஜனவரி 29, சென்னை (Health Tips): தன்னகத்தே பல நன்மைகள் கொண்ட முருங்கையில் அதன் இலை, காய், பூ ஆகியவை பல நன்மைகளை கொண்டவை ஆகும். இன்று நாம் முருங்கைக்காயில் (Drumstick Plant) இருக்கும் பல மருத்துவ குணங்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். சாம்பார், காரக்குழம்பு, அவியல் என பல வகைகளில் நமக்கு விருப்பப்பட்ட வகையில் சமைத்து முருங்கையை சாப்பிட்டு பலன் பெறலாம்.

இரத்தம், சிறுநீர் சுத்தமாக: முருங்கைக்காயில் (Moringa) இருக்கும் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, பி2, பி3, பி6, போலட்டுகள் ஆகியவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குபவை ஆகும். மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு முருங்கைக்காய் (Drumstick Plant) மருந்தாக அமைகிறது. உடலுக்கு தேவையான வலுவை கொடுத்து, சிறுநீரகத்தை பலப்படுத்தும். தாது உற்பத்தி என்பது அதிகமாகும். வாரத்தில் இரண்டு முறை முருங்கைக்காயை உணவுடன் எடுத்துக் கொண்டால் இரத்தம், சிறுநீர் சுத்தமாகும். Thulladha Manamum Thullum: ருக்குவின் தவிப்பும், குட்டியின் ஏக்கமும் நினைவிருக்குதா? - துள்ளாத மனமும் துள்ளும் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு.! 

Murungaikkai Flower (Photo Credit: Pixabay)

உடலின் ஆரோக்கியம் மேம்பட: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டு வர மலக்குடலில் இருக்கும் கிருமிகள் வெளியேற்றப்படும். மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டுள்ளோர், சளி பிரச்சனை உடையோர், இரத்த சோகை, கல்லீரல், கணையம் வீக்கம் கொண்டவர்கள் முருங்கைக்காயை தொடர்ந்து உணவில் சேர்த்து வர மேற்கூறிய பிரச்சனைகள் தீர்ந்து நல்ல பலன் கிடைக்கும். நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள முருங்கைக்காய் ஆயுர்வேதம், யுனானி போன்ற இயற்கை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

அல்சர் எதிர்ப்பு பண்புகள் கிடைக்க: புற்றுநோய்க்கு எதிரான செல்களின் வளர்ச்சியை தடுப்பதிலும், ஆஸ்துமா பிரச்சனைக்கு மருந்தாகவும், அலர்ஜி போன்ற விஷயங்களை தடுக்கவும், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை செயல்படுத்தி உடலை நலப்படுத்தவும் முருங்கைக்காய் உதவுகிறது. இதில் இருக்கும் அல்சர் எதிர்ப்பு பண்புகள், அல்சர் பிரச்சனைகளை விரைந்து சரி செய்யும். சிறுநீரக கற்களை குறைக்க உதவுதல், இரத்த அழுத்தத்தை குறைத்தல் போன்றவைக்கும் முருங்கைக்காய் நல்லது.

குறிப்பு: உடலுக்கு நன்மையை தரும் காய்கறிகளை அளவுடன், சம உணவு இடைவெளியில் சாப்பிடுவதே நல்லது. மாறாக "அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.