ஜனவரி 11, லக்னோ (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில், லக்னோ பல்கலைக்கழகம் (Lucknow University) செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள திலக் பெண்கள் தங்கும் விடுதியில், கல்லூரி மாணவி தங்கி இருந்து பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.
மாணவி தூக்கிட்டு தற்கொலை: சம்பவத்தன்று, இவர் தனது விடுதி அறையில் தனியாக இருந்தபோது மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையை செல்போனில் அவர் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்து தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், கல்லூரி விடுதி வளாகத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மனஉளைச்சலில் விபரித முடிவு? மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண்மணி வாரணாசி பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் இந்த முடிவு எடுத்திருக்கலாம் என்ற சந்தேகிக்கப்பட்டுள்ளது. Trending Video: உயிரிழந்த தந்தை சடலத்தின் வாயில் மது ஊற்றி இறுதி மரியாதை; சுடுகாட்டில் மகன் செய்த செயல்.. வைரல் வீடியோ.!
படிப்பு முடியும் தருவாயில் சோகம்: உயிரிழந்த கல்லூரி மனைவியுடன் நான்கு மாணவிகள் தங்கி இருந்த நிலையில், அவர்கள் சம்பவத்தன்று மார்க்கெட்டுக்கு சென்று மீண்டும் வந்தபோது இந்த விபரீதம் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட மாணவி பிரியாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் தற்போது மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
அதிகாரிகள் விசாரணை: இவரின் தற்கொலைக்கான காரணம் என்பது குறித்து அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் செல்போன் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவர் எதற்காக செல்போனில் வீடியோ எடுத்து வைத்தவாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்? என விசாரணை நடந்து வருகிறது.