ஜனவரி 11, வாரணாசி (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியை சேர்ந்த நபர், தனது மறைந்த தந்தையின் சடலத்தை இடுகாட்டில் வைத்து எரியூட்டும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை மேற்கொண்டார். அப்போது, தந்தையின் வாயில் மதுபானம் ஊற்றி, பீடி மற்றும் பாண் ஆகியவற்றை வைத்தவாறு தகனம் செய்தார். இந்நிகழ்வின்போது அங்கிருந்த நபர்கள், "ஹர் ஹர் மகாதேவ்" என தங்களின் முழக்கத்தை வெளிப்படுத்தினர். உயிரிழந்த நபரின் விருப்பத்தினை மதிக்கும் வகையில் இவ்வாறு செய்ததாக மகன் தெரிவித்தார். இதுகுறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்துமத வழக்கப்படி உயிரிழந்த நபரின் வீட்டில் நடக்கும் படையல் காரியத்தின்போது, அவருக்கு பிடித்த பொருட்களை வாங்கி வைத்து அந்நிகழ்வை சிறப்பிப்பார்கள். அதேபாணியில் மறைந்த தந்தைக்கு மகன் சுடுகாட்டில் வைத்தே இறுதிச்சடங்கு செய்துள்ளார். Heart Chilling Death: 6 மாத கைக்குழந்தையுடன் 16வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை: தாய் - பச்சிளம் குழந்தை உடல் சிதறி பலி.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)