UP Shocker: அம்மா, தங்கையை கொடூர கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்; வீட்டுக்குள் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!

அப்பா, அம்மா, தங்கை ஆகியோரின் மீது கொடூர தாக்குதல் நடத்திய இளைஞரின் அதிர்ச்சி செயலால் 2 உயிர்கள் பரிதாபமாக பலியானது.

UP Shocker: அம்மா, தங்கையை கொடூர கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்; வீட்டுக்குள் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
Crime File Picture (Photo Credit: PIxabay)

ஜூலை 21, பிரயாக்ராஜ் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ரயாக்ராஜ் மாவட்டம், க்ரெலி பகுதியை சேர்ந்தவர் முகம்மது காதிர். இவரின் மனைவி அனிஷா பேகம் (வயது 65). தம்பதிகளுக்கு நிகாட் (வயது 35) என்ற மகளும், ஆரிப் முகம்மது என்ற மகனும் இருக்கின்றனர்.

இவர்களில் ஆரிப் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில், சம்பவத்தன்று ஆரிப் தனது குடும்பத்தினரை ஆத்திரமுற்று சரமாரியாக கத்தியால் தாக்கி இருக்கிறார்.

இந்த சம்பவத்தில் குடும்பத்தினர் அனைவரும் அபயக்குரல் எழுப்பியதை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினரால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களை காப்பாற்ற வந்த உள்ளூர் மக்கள் மீதும் ஆசிட் வீசப்பட்டுள்ளது. Actress Raped: “படுக்கையை பகிராமல் இன்டெர்வியு முடியாது” – 21 வயது இளம் நடிகை பாலியல் பலாத்காரம்..!

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு ஆரிப்பை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரின் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்து உயிரிழந்த அனிஷா மற்றும் நிகத் ஆகியோரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

படுகாயமடைந்த காதிர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். அதேபோல, இவர்களை காப்பாற்ற வந்து ஆசிட் வீசி தாக்குதலில் சிக்கிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். காவல் துறையினர் ஆரிப்பை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jul 21, 2023 10:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).