ஜூலை 21, குருகிராம் (Cinema News): திரைத்துறையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்கள் அடுக்கடுக்காக எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஒருசில மோசடி நபர்கள் திட்டமிட்டு பெண்களை சூறையாடி வருகின்றனர். இவர்களின் கொட்டத்தை ஒடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம், உத்யோக் விஹார் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண், பல போஜ்பூரி படங்களில் நடித்து வந்துள்ளார். கடந்த ஜூலை 20ம் தேதி மகேஷ் பாண்டே என்ற நபரிடம் இருந்து இளம்பெண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது.

இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசிக்கொண்ட நிலையில், பாண்டே தன்னை திரைத்துறையில் பரிட்சயமான நபராக அறிமுகம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஜூலை 27ல் செல்போன் நம்பரை பரிமாறிக்கொண்டுள்ளனர். மகேஷ் பாண்டே அங்குள்ள சக்கர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

படக்குழு ஒன்று படத்திற்கு நடிகையை தேடி படக்குழு நேர்காணல் நடத்தி வருவதாகவும், உத்யோக் விஹார் பகுதியில் செயல்படும் தனியார் ஹோட்டலுக்கு வந்து நேர்காணலில் கலந்துகொள்ளுமாறும் நடிகையிடம் பாண்டே கூறி இருக்கிறார். இதனைக்கேட்ட நடிகை ஜூலை 29ம் தேதி ஹோட்டலுக்கு சென்ற நிலையில், அங்கு 21 வயது இளம்பெண் பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். Power Cut: அச்சச்சோ.. சென்னையில் உள்ள இந்த பகுதிகளில் இன்று மின்தடை; மக்களே ரெடியா இருங்கள்.!

இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட போஜ்பூரி நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டலில் இருந்த சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையில் இளம்பெண்ணுக்கு ஹோட்டல் அறையில் வைத்து குளிர்பானத்தில் மது கலந்துகொடுத்த நிலையில், பலவந்தப்படுத்தி படுக்கையை பகிர வற்புறுத்தி இருக்கிறார். இன்டெர்வியு நீ படுக்கையை பகிராமல் முடியாது என கூறி பலாத்காரம் செய்துள்ளார். பின் இதுகுறித்து வெளியே கூறக்கூடாது எனவும் மிரட்டி சென்றுள்ளார்.