Victim Prakash Kumar Singh (24) - Accuse with Cops (Photo Credit: @SachinGuptaUP)

பிப்ரவரி 18, ஹில்த்வானி (Uttarakhand News): உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹில்த்வானி பகுதியில், மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான சம்பவத்திற்கு பின் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். கொலையானவர்களில் புலம்பெயர் தொழிலாளராக இருந்து வந்த பிரகாஷ் குமார் சிங் (வயது 24) என்பவரும் அடையாளம் காணப்பட்டு இருந்தார். இவரின் தலையில் 3 துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்து பலியானது உறுதி செய்யப்பட, அவரின் கொலை சம்பவத்தில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

விசாரணையில் கொலைக்கான காரணமாக அதிர்ச்சி திருப்பம்: இதனையடுத்து, அவரிடம் செல்போன் வாயிலாக இறுதியாக பேசிய நபர், அதிகம் பேசிய நபர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. அப்போது, காவலர், அவரின் மைத்துனர் உட்பட 4 பேர் கும்பல் செய்த பதறவைக்கும் கொலை சம்பவம் அம்பலமானது. மேலும், குமார் சிங்கின் சர்ச்சை செயலும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. காவலரின் மனைவியுடன் பிரகாஷ் குமார் சிங் கொண்டிருந்த கள்ளக்காதல் பழக்கம் அவரின் உயிரை பறித்த உண்மையையும் உறுதி செய்தது. GSLV F14 INSAT 3DS Mission: விண்ணில் சீறிபாய்ந்தது இஸ்ரோவின் அதிநவீன வானிலை செயற்கைகோள்; அட்டகாசமான காட்சிகள் இதோ.! 

நண்பனின் சகோதரியுடன் கள்ளக்காதல்: கொலையான பிரகாஷ் குமார் சிங்-க்கு சூரஜ் என்ற நபர் நண்பராக இருந்து வந்துள்ளார். இவர் நைனிடால் பகுதியை சேர்ந்தவர் ஆவார். நட்பின் அடையாளமாக அவ்வப்போது அவர் சூரஜின் வீட்டிற்கும் வந்து சென்றுள்ளார். சூரஜுக்கு பிரியங்கா என்ற சகோதரி இருக்கிறார். இவர் பிரேந்திரா சிங் என்ற நபரை திருமணம் செய்து கணவருடன் வாழ்ந்து வருகிறார். பிரேந்திரா சிங் காவலர் ஆவார். அவ்வப்போது வீட்டிற்கு வந்து சென்ற பிரகாஷ், தனது நண்பரின் சகோதரி பிரியங்காவுடன் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

Murder | Crime File Pic (Photo Credit: Pixabay)

அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டல்: இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறவே, இருவரும் தனிமையில் சன்னதிது இருக்கின்றனர். அப்போது, தனிமை காட்சிகளை பதிவு செய்த பிரகாஷ், பிரியங்காவை விடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர காய்நகர்த்தி இருக்கிறார். முதலில் பிரகாஷின் செயல்பாடுகளை பொறுத்துக்கொண்ட பிரியங்கா, பின் தனது கணவர் மற்றும் சகோதரர் சூராஜிடம் நடந்தவற்றை கூறி இருக்கிறார். Suhani Bhatnagar: 19 வயது இளம் நடிகைக்கு இப்படியொரு சோகமா?.. விபத்தில் சிக்கி மருந்து ஒவ்வாமையால் சோகம்.! 

சமாதான பேச்சுவார்த்தையில் தோல்வி: இதனையடுத்து பிரேந்திர சிங், சூரஜ், அவரின் நண்பர்கள் நயீம் கான் என்ற பப்லூ ஆகியோர் சேர்ந்ந்து பிரகாஷ் குமார் சிங்கை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். தங்களின் திட்டப்படி பிரியங்கா உதவியுடன் பிரகாஷை ஹல்த்வானிக்கு அழைத்தவர், அங்கு செல்போனில் இருக்கும் ஆபாச விடியோவை நீக்கிவிட்டு, கள்ளக்காதல் கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பிரகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

4 பேர் கைது, பெண்ணுக்கு வலைவீச்சு: இதனால் ஆத்திரமடைந்த பிரேந்திரா ஒருகட்டத்தில் பிரகாஷை சுட்டுக்கொலை செய்தார். பின் அவரின் உடலை கலவர விவகாரத்தை சாதகமாக்கி, சம்பவ நடந்த இடத்தில் இருந்து 2 கி.மீ எல்லைக்குள் விட்டுவிட்டு சென்றுள்ளனர். அதன்பின்னரே அதிகாரிகளால் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர் காவலர் பிரேந்திர சிங் (வயது 36), மைத்துனர் சூரஜ் பெயின் (வயது 28), பிரேம் சிங் (வயது 30), நயீம் கான் (வயது 50) ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். பிரியங்கா தலைமறைவாக இருக்கிறார். அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.