GSLV-F14/INSAT-3DS Mission Launch (Photo Credit: @DDTamil YouTube)

பிப்ரவரி 17, ஸ்ரீஹரிகோட்டா (Technology News Tamil): இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் (Indian Space Research Organization ISRO), இந்திய அளவிலான வானிலையை துல்லியமாக தெரிந்துகொள்ள இன்சாட் 3 டிஎஸ் (INSAT 3DS) அதிநவீன வானிலை செயற்கைகோள் பிப்ரவரி மாதம் 17ம் தேதி மாலை 05:30 மணியளவில் விண்ணில் செலுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

விண்ணில் இன்று பாய்ந்தது: இஸ்ரோவின் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜிஎஸ்எல்வி எப்14 செயற்கைகோள் (NSAT-3DS Mission), ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பாயும் செயற்கைகோள், விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதும் துல்லியமான வானிலை தகவல்கள் கிடைக்கும். Suhani Bhatnagar: 19 வயது இளம் நடிகைக்கு இப்படியொரு சோகமா?.. விபத்தில் சிக்கி மருந்து ஒவ்வாமையால் சோகம்.! 

GSLV-F14 NSAT-3DS Mission (Photo Credit: @ISRO X)

மூன்று-நிலை ஏவுகணை: எதிர்கால வானிலை துல்லிய தகவலுக்கு செயற்கைகோள்: இதன் வாயிலாக எதிர்காலத்தில் ஏற்படும் புயல் உட்பட பல்வேறு வானிலையை துல்லியமாக கணித்து, சமீபத்தில் ஏற்பட்ட திடீர் மழை வெள்ளத்தை முன்கூட்டியே கணித்து, மக்கள்படும் இன்னல்களை தவிர்க்க வழிவகை செய்ய இயலும். வானிலை அதிநவீன செயற்கைகோள் 420 டன் எடை, 51.7 மீ நீளம் கொண்ட மூன்று-நிலை ஏவுகணை வாகனம் ஆகும்.

அதிநவீன தொழில்நுட்பங்கள்: பூமியின் மேற்பரப்பு, கடல் ஆகியவற்றை அதிநவீன வானிலை செயற்கைகோள் கண்காணிப்பதன் வாயிலாக, எதிர்கால வானிலை மாறுதல்களை முன்கூட்டியே கணிக்க இயலும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். புவி அறிவியல் அமைச்சகத்தின் நிதி பங்களிப்பால் தயாரிக்கப்பட்டுள்ள அதிநவீன வானிலை செயற்கைகோள் இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு பேருதவி புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்ணில் சீறிப்பாய்ந்த நேரலை காட்சிகள்: