Gangnani Bus Accident: 50 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்து.. சுற்றுலா பயணிகள் 7 பேர் பலி., 28 பேர் படுகாயம்.!
தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர 50 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 8 பேர் பலியாகிவிட, காயமடைந்த 27 பேரில், 10 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.
ஆகஸ்ட் 21, உத்திரகாண்ட் (Uttarakhand News): உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாஷி, கங்கோத்ரி (Gangotri National HighwayGa Accident) தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காங்ஞானி பகுதியில் நேற்று பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படை அதிகாரிகள், விரைந்து செயல்பட்டு காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 27 பேரில், 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. Samantha Ruth Prabhu: நியூயார்க் நகரின் அழகை ரசிக்கும் சமந்தா – அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சி.!
35 பேர் பயணம் செய்த பேருந்து, 50 மீட்டர் பள்ளத்தில் கல்விந்து விபத்திற்குள்ளானது. இந்த பயணிகள் குஜராத்தில் இருந்து உத்திரகாண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்தவர்கள் ஆவார்கள். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகளை செய்துள்ளார்.
VIDEO | SDRF carries out rescue operation after a bus fell into a gorge in Uttarakhand's Uttarkashi. pic.twitter.com/884Ow7MFXq
— Press Trust of India (@PTI_News) August 20, 2023
(The above story first appeared on LatestLY on Aug 21, 2023 10:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

