Woman Dies By Suicide: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் தகராறு; மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!

உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அடிமை காரணமாக கணவருடன் ஏற்பட்ட சண்டையால் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman Dies By Suicide: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் தகராறு; மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!
Instagram Reels (Photo Credit: Pixabay)

டிசம்பர் 28, மஹோபா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மஹோபா (Mahoba) மாவட்டத்தில் குல்பஹார் பகுதியில் உள்ள லட்பூர் கிராமத்தில் இருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில், மஹோபா-கஜுராஹோ ரயில் பாதையில் ஒரு பெண்ணின் சடலம் நேற்று (டிசம்பர் 27) காலை தண்டவாளத்தில் இருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டது. உயிரிழந்த பெண் லட்பூர் கிராமத்தை சேர்ந்த சுலேகா (வயது 20) என்பது கண்டறியப்பட்டது. Bride's Complaint Against Groom: ரொட்டி பரிமாறுவதில் தாமதம்; வேறொரு பெண்ணை திருமணம் செய்த மணமகன்.. மணமகள் பரபரப்பு புகார்..!

ரீல்ஸ் அடிமை:

இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையில், இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஷபிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சுலேகா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் (Instagram Reel) ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருப்பது அவரது கணவருக்கு பிடிக்காததால், தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 26) மாலை சமையலறையில் இரவு உணவு சமைத்துக் கொண்டிருக்கும்போதும், அவர் ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கடும் ஏற்பட்டுள்ளது.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை:

இதனையடுத்து, அவரது கணவர் தூங்க சென்றுள்ளார். விடியற்காலை எழுந்து பார்க்கையில் அவரது மனைவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அப்போது, ரயில் தண்டவாளத்தில் அவரது மனைவியின் சடலம் மீட்கப்பட்டது. கணவருடன் ஏற்பட்ட சண்டையால் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை (Suicide)செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050.

(The above story first appeared on LatestLY on Dec 28, 2024 06:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).