டிசம்பர் 28, சந்தோலி (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், சந்தோலி (Chandauli) மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தில் மணமகளின் திருமணம் (Wedding) மெஹ்தாப் என்ற இளைஞனுடன் 7 மாதங்களுக்கு முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அன்று, திருமண விழாக்கள் உற்சாகத்துடன் தொடங்கியது. மணமகளின் குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்று, பின்னர் அவர்களுக்கு உணவு பரிமாறினர். அப்போது, மணமகன் வீட்டார் ஒருவர், ரொட்டி (Roti) தாமதமாக வழங்கப்படுவதாகக் கூறி தகராறு செய்தார். School Boy Murder: 9 வயது சிறுவன் கொலை வழக்கு; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்.. நடந்தது என்ன..?
ரொட்டி பரிமாறுவதில் தாமதம்:
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மணமகன் தரப்பை சமாதானம் செய்ய முயற்சித்த போதிலும், அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். மேலும், மணமகன் அன்று இரவில் காணாமல் போனார். பின்னர், அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தகவல் அறிந்த மணமகளின் குடும்பத்தினர், காவல்நிலையத்தை அணுகி புகார் அளித்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அன்று காவல் கண்காணிப்பாளரிடம் உதவி கோரினர்.
மணமகள் புகார்:
மணமகன் வீட்டாருக்கு வரதட்சணையாக அனுப்பப்பட்ட ரூ.1.5 லட்சம் உட்பட ரூ.7 லட்சம் நிதி இழப்பு ஏற்பட்டதாக மணமகளின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். மணமகன் தரப்பில் இருந்து 5 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க மணமகள் எஸ்பியிடம் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, எஸ்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.