Woman Dies By Heart Attack: குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தாய்க்கு மாரடைப்பு.. துடிதுடித்து பலியான வீடியோ வைரல்..!

குஜராத்தில் 5 வயது மகனின் பிறந்தநாள் விழாவில் 37 வயது பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman Dies By Heart Attack: குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தாய்க்கு  மாரடைப்பு.. துடிதுடித்து பலியான வீடியோ வைரல்..!
Woman Dies By Heart Attack (Photo Credit: @jaydeepvtv X)

செப்டம்பர் 18, வல்சாத் (Gujarat News): குஜராத் மாநிலம், வாபி நகரில் (Vapi Town) உள்ள சார்வாடா பகுதியை சேர்ந்தவர் யாமினிபென் பரோட் (வயது 37). இவர், செப்டம்பர் 14-ஆம் தேதி தனது 5 வயது மகனின் பிறந்தநாள் விழாவை (Birthday Party) வாபி நகரில் உள்ள ஹோட்டலில் கொண்டாடினார். அப்போது, தனது மகனை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு, சற்று நேரத்தில் திடீரென மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்டு அந்த பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே, அவரை காப்பாற்ற அவரது கணவர் பல முயற்சிகளை செய்தும் எந்த பலனும் அளிக்கவில்லை. Jammu Kashmir Elections 2024: 24 தொகுதிகளில் முதற்கட்டமாக நடக்கும் வாக்குப்பதிவு; விறுவிறுப்புடன் வாக்களிக்கும் மக்கள்.!

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹோட்டல் நிர்வாகத்திடமும், குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் சிசிடிவி காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

பெண் மாரடைப்பால் மரணமடைந்த வீடியோ காட்சி:

(The above story first appeared on LatestLY on Sep 18, 2024 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).