மார்ச் 19, மொராதாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் பகுதியை சேர்ந்தவர் திவாகர் குமார். இவர் அங்குள்ள சுற்றுவட்டாரத்தில் பிரபலமான யூடியூபர் ஆவார். இவர் பொழுதுபோக்கு மற்றும் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிடும் வீடியோவை (YouTuber Tie Knot with Iran Girl Soon) தனது முகநூல் பக்கத்திலும் பதிவேற்றி வந்துள்ளார். பலரும் யூடியூபர் என்ற முறையில் திவாகரிடம் பேசி வந்த நிலையில், ஈரான் நாட்டை சேர்ந்த பெண்மணி பையாஸ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. முகநூலில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட அறிமுகம் நட்பாக தொடர்ந்தது. ஒருகட்டத்தில் நண்பர்கள் இருவரும் ஈரானில் நேரில் சந்தித்துக்கொண்டுள்ளனர். License Gun Return: பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: தனிநபர் பாதுகாப்புக்காக, உரிமம் பெற்ற 4,914 துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டுகோள்.!
முகநூல் காதலியை கடல்தாண்டி கரம்பிடிக்கும் இளைஞர்: இந்த சந்திப்பு இருவருக்கும் இடையே இருந்த நட்பு உறவை, கடல்கடந்து காதலாக மாற்றி இருக்கிறது. இதனால் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். காதல் ஜோடிகள் தங்களின் பெற்றோரிடம் மனம்திறந்து பேசவே, அவர்களும் காதல் ஜோடிக்கு பச்சைக்கொடி காண்பித்து இருக்கின்றனர். இதனையடுத்து, பயாஸ் தனது குடும்பத்துடன் இந்தியாவிற்கு வந்து, திவாகரன் இல்லத்தில் வைத்து தம்பதிகளின் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் தாங்கள் திருமண தேதியை அறிவிக்கிறோம் என இருதரப்பு உறவினர்களும் தெரிவித்து இருக்கின்றனர். காதலித்த ஜோடிகள் எவ்வித எதிர்ப்பும் இன்றி இருதரப்பு பெற்றோர்களால் இணைந்திருப்பது பாராட்டுகளை குவித்து வருகிறது..
SM इन्फ्लुएंसर अंतरराष्ट्रीय संबंध लगातार मजबूत कर रहे हैं...
मुरादाबाद (UP) के यूट्यूबर दिवाकर कुमार की ईरान निवासी फैजा से FB पर दोस्ती हुई। दिवाकर ने ईरान जाकर मुलाकात की। फिर दोनों में मुहब्बत हुई। दोनों परिवार शादी को राजी हो गए। फैजा ने भारत आकर सगाई की, जल्द शादी होगी। pic.twitter.com/gItT6UtciV
— Sachin Gupta (@SachinGuptaUP) March 18, 2024