மார்ச் 19, ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir News): இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) திறம்பட மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு காற்பந்தாக செயல்பட்டு வருகிறது. 7 கட்டமாக நடைபெறும் பாராளுமன்ற (General Elections 2024) தேர்தல், 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் என அனைத்து தேர்தல் முடிவுகளும் ஒரேகட்டமாக ஜூன் மாதம் 04ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வெளியிடப்படும். Kareena Kapoor Confirms Kannada Debut: தென்னிந்தியாவில் களம் இறங்கும் “சமக் சலோ”.. யாஷுடன் நடிக்கப் போகும் கரீனா கபூர்..!
கண்காணிப்பு பணிகள் தீவிரம்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்தியாவெங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால், தேர்தலை சுமூகமாக, ஜனநாயக ரீதியாக, பாதுகாப்புடன் நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் சார்பில் மக்களுக்கு இலவச பொருட்கள் மற்றும் பணம் ஆகியவை கொடுக்கும் நிகழ்வுகளை தடுக்க தாலுகா வாரியாக சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. மக்கள் பணம் எடுத்து செல்லவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. Thalapathy Vijay in Kerala: 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா.. ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்த நடிகர் விஜய்..!
துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்: இந்நிலையில், ஜம்மு காஷ்மீரிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன. அங்கு ஏப்ரல் மாதம் 26ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி ஜம்மு மாவட்ட நடுவர் மற்றும் தேர்தல் அதிகாரி சச்சின் குமார் வைஸ்யா, ஜம்முவின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் மக்கள், அரசின் அங்கீகாரத்துடன் பயன்படுத்தி வரும் துப்பாக்கிகளை மீண்டும் காவல் நிலையங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜம்முவில் அனுமதிக்கப்பட்ட துப்பாக்கிகளை பயன்படுத்த உரிமம் பெற்ற 4,914 நபர்களின் துப்பாக்கிகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.