Robot Serve Food: ஓட்டலில் வேலை பார்க்கும் ரோபோ – வீடியோ வைரல்..!
அகமதாபாத்தில் உள்ள ஓட்டலில் ரோபோ உணவு பரிமாறும் காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
மார்ச் 12, குஜராத் (Gujarat News): நவீன விஞ்ஞான வளர்ச்சியில் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் அதிகளவில் ரோபோக்களின் பங்கீடு உள்ளது. ரோபோக்களை (Robot) நகரங்களில் உள்ள பெரிய ஓட்டல்களில் பெரும்பாலும் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. PM Modi In Pokhran: பொக்ரானில் மாஸ் காண்பிக்கப்போகும் இந்திய இராணுவம்; நேரில் பார்க்க விரையும் பிரதமர்.! விபரம் இதோ.!
தற்போது, அகமதாபாத்தில் உள்ள தெருவோர ஓட்டலில் ரோபோ வெயிட்டர் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடும், மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், பணியில் ஈடுபட்டுள்ள ரோபோ அதன் வாடிக்கையாளர்களுக்கு ஐஸ் கோலாக்களை வழங்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், அகமதாபாத்தை சேர்ந்த உணவு பிரியரான கார்த்திக் மகேஷ்வரி என்ற நபர் சமூக வலைதளங்களில் அதன் காட்சிகளை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த பல்வேறு பயனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Mar 12, 2024 11:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

