Astrology: 2025 ஆம் ஆண்டு மிருகசீரிடம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

2025 ஆம் ஆண்டு மிருகசீரிடம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

Astrology: 2025 ஆம் ஆண்டு மிருகசீரிடம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
ASTRO (Photo Credit: Pixabay)

நவம்பர் 27, சென்னை (Astrology Tips): ரிஷபம் மற்றும் மிதுன ராசியில் இருக்கும் மிருகசீரிடம் (Mirugaseeridam) நட்சத்திரக்காரர்களே, அதிர்ஷ்ட காற்று வீசும் நட்சத்திரங்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கு முக்கியமான கிரகங்களின் பரிபூரண அனுக்கிரகம் இருப்பதால் மிகச் சிறந்த நல்ல பலன்களை இந்த 2024 ஆம் ஆண்டில் அனுபவித்து வருகிறீர்கள். தொழில் வெற்றி, நல்ல லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி, புதிய வாகனம் வாங்குதல், இடம் வாங்குதல், வீடு மனை புதுப்பித்தல், வீடு கட்டுதல், வெளிநாடு செல்லுதல் போன்ற நல்ல பலன்கள் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஜாதகத்தில் திசை புத்தி சரியில்லாதவர்கள் மட்டுமே சாதாரண பலன்களை நடைமுறையில் அனுபவித்து வருவார்கள். ஜாதகத்தில் திசை புத்தி நன்றாக இருப்பவர்கள் மிகச் சிறந்த பலன்களை அனுபவித்து வருவார்கள். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் கூட கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஷேர் மார்க்கெட்டில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, அதிகாரிகள் மற்றும் பெரிய அரசியல்வாதிகளின் ஆதரவு, காரிய சாதனை, எதிர்பாராத வருமானம் போன்றவை கிடைக்க பெறுவீர்கள். Astrology: 2025 ஆம் ஆண்டு ரோகிணி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

இந்த நல்ல பலன்கள் எல்லாம் வரும் மார்ச் முழுவதும் உங்களுக்கு கிடைக்கும். அதன் பிறகு இந்த நல்ல பலன்களில் 50 சதவீதம் குறைந்துவிடும். ரிஷப ராசி மிருகசீரிடகாரர்களுக்கு, சித்திரை மாதம் முதல் தொழில் தடைகள் ஏற்படலாம். தொழில் மந்தம், தொழிலில் பிரச்சனைகள், அரசு அதிகாரியாக இருந்தால் சித்திரை மாதம் முதல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம்.

மிதுன ராசி மிருகசீரிடம் அன்பர்களுக்கு தந்தை வழியில் செலவினங்கள் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. வெளியூர், வெளிநாடு போக்குவரத்துக்கள் தடைபடும். அதனால் பிரச்சனைகள் ஏற்படும். கோயில்களுக்கு போவதற்கு கூட உங்களுக்கு நேரம் அமைவது கடினமாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி வீடு மனைவி வகையில் முன்னேற்றம் இடம் வாங்குவது மற்றும் தாய் வழி ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்: முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றம் தரும்.

உங்கள் மதிப்பெண் 60.

இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).