Astrology: 2025 ஆம் ஆண்டு ரோகிணி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

2025 ஆம் ஆண்டு ரோகிணி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

Astrology: 2025 ஆம் ஆண்டு ரோகிணி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
ASTRO (Photo Credit: Pixabay)

நவம்பர் 26, சென்னை (Astrology Tips): ரிஷப ராசியில் இருக்கும் ரோகிணி (Rohini) நட்சத்திரக்காரர்களே, தற்சமயம் நீங்கள் கடுமையான சோதனையான ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டு இருக்கிறீர்கள். வரும் பங்குனி மாதம் வரை இந்த ஒரு சோதனை காலம் இருக்கும். அதன் பிறகு ஒரு ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கின்றது. தற்போது, தொழில் முடக்கம், தொழில் தடை , வேலை இழப்பு, அவப்பெயர், பெயர் கெட்டுப்போதல், பண நெருக்கடி, குடும்பத்தில் பிரச்சனைகள் போன்ற ஒரு கடுமையான சூழலை சந்தித்து வருகின்றீர்கள்.

ஜாதகத்தில் திசை புத்தி நன்றாக இருந்தாலும் தொழிலில் லாபம் மிக குறைவாகவே இருக்கும் அல்லது ஒரு சிலருக்கு தொழில் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும். சிலர் புதிதாக கடன் வாங்கி இருப்பீர்கள் கடன் தொல்லையால் சிலர் அவதிப்படுவீர்கள். ஒரு சிலர் நோய் நொடியால் பாதிக்கப்பட்டு வீண் விரைய செலவுகளை மருத்துவச் செலவுகளை எதிர்கொண்டு இருப்பீர்கள். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணத்தடை ஏற்பட்டு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். வெளிநாடு முயற்சி செய்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி உடனடியாக வேலை வாய்ப்பு அமையாது. இப்படி ஒவ்வொருவரும் அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப பல சிரமங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றீர்கள். Astrology: 2025 ஆம் ஆண்டு கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

ஷேர் மார்க்கெட்டில் இருப்பவர்கள் ஆறு மாதத்திற்கு ஷேர் மார்க்கெட் தொழிலில் ஈடுபட வேண்டாம். ஏனென்றால் அது நஷ்டத்தை மட்டுமே தரும். எச்சரிக்கையுடன் இருக்கவும். வரும் சித்திரை மாதம் முதல் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த நன்மையான பலன்கள் நடைபெறும். இதுவரை கோயிலுக்கு கூட செல்ல முடியாமல் இருந்த நீங்கள் தற்போது கோயிலுக்கு சென்று வரக்கூடிய இறை வழிபாடு செய்யக்கூடிய வாய்ப்பை பெறுவீர்கள். இந்த 2025 ஆம் ஆண்டு, சித்திரை மாதத்திற்கு மேல் உங்களுக்கு ஒரு மிகச் சிறந்த நல்ல எதிர்காலத்தை அமைத்து தரும் என்பதை உறுதியாக கூறலாம். ஜாதகம் திசை புத்திகள் நன்றாக இருந்தால் மிகச் சிறப்பான ஒரு ஆண்டாக இது அமையும். ஜாதகத்தில் திசை புத்திகள் சரியில்லை என்றால் இந்த ஆண்டு சுமாராக அமையும்.

பரிகாரம்: அம்பாள் வழிபாடு உங்களுக்கு அனைத்து நலன்களையும் பெற்றுத் தரும். பிரதோஷ வழிபாடு உங்கள் பிரச்சினைகளை தீர்க்கும்.

உங்கள் மதிப்பெண் 70.

இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.

(The above story first appeared on LatestLY on Nov 26, 2024 07:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).